இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, இன்றைய ஆட்ட நேர முடிவில், பங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதேவேளை 166 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
ஆட்டநேர முடிவில், மெஹூடி ஹசன் 5 ஓட்டங்களுடனும், லிடன் தாஸ் 24 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று (வியாழக்கிழமை) டாக்கா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பங்களாதேஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அப்துர் ரஸ்ஸாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.