சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊரியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்ககையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7, அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை