தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம் அதிக அளவில் உயர்ந்து வருவதால் தயாஇப்பாளர்களுக்கு பெரும் சிக்கலும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கல் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் சிவா மனசுல ப்யூஷா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பின்வருமாறு பேசினார்.
இன்று நாளிதழில் ஒரு செய்தியை படித்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
நயன்தாராவுக்கு ரூ.5 கோடி, ஹன்சிகாவிற்கு ரூ.3 கோடி, தமன்னாக்கு ரூ.1 கோடி. சினிமா தெருக்கோடிக்கு போச்சு,
இன்றைய சினிமா நாசமா போச்சு, படம் எடுத்த தயாரிப்பாளர் காணாமல் போனார்கள்.
இந்த ஜிஎஸ்டி போட்ட புண்ணியவான் நாசமாபோகணும், இப்படி நடிகைகள் சம்பள கணக்கை போடும் நாளிதழ்கள் தயாரிப்பாளரின் கதியை பற்றி போடுமா என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.