லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றும் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக பிரித்தானிய தமிழ் பேரவை அறிவித்துள்ளது.
பல்வேறு புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டப்பேரணியை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லண்டனில் இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தில் லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என பிரியங்கர பெர்னாண்டோ சைகையால் காட்டியிருந்தமை அனைவரும் அறிந்ததே
குறித்த விடையம் தொடர்பாக அவரை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றுமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆரம்பித்து கொமன்வெல்த் அலுவலகத்தின் முன்பாக நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.