லண்டனில் புலம்பெயர் தமிழர்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
கடந்த 4ம் திகதி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, உயர்ஸ்தானிகரகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் பிரியக்க ஃபெர்ணாண்டோ ராஜதந்திர பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு முன்னதாக அறிவித்தது.
எனினும் ஜனாதிபதியின் தலையீட்டில், மீண்டும் அவருக்கு ராஜதந்திர பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பிரித்தானியாவில் இயங்கும் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன.