Loading...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலதிக பட்டியலில் வேட்பாளராக போட்டியிடும் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் வென்னப்புவ பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலதிக பட்டியலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
Loading...
இவர் சுகவீனம் காரணமாக கடந்த ஜனவரி 5 ஆம் திகதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பெண் ஜனவரி 8ஆம் திகதி மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக கணவன் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்துள்ள பெண்ணின் கணவன், வென்னப்புவ பிரதேச சபைக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
Loading...