கனடாவில் வசிக்கும் தமிழ்ச்சிறுவன் கோலாலம்பூரில் நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில் 8 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு பதிலளித்து சாதனை படைத்துள்ளான்.
கனடாவின் Ajax நகரிலுள்ள Michaelle Jean பள்ளியில் Grade 5இல் பயின்று வரும் மாணவன் Nilaksan Rajkumar.
Grade 2இல் படிக்கும்போதே பள்ளியில் பயிற்றுவிக்கும் கணிதத்தில் திருப்தியடையாமல் தனியாக UCMAS என்னும் கணித வகுப்புகளில் சேர்ந்து பயிலத் தொடங்கியிருக்கிறான்.
UCMAS என்பது கடினமான கணக்குகளை கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் மனக்கணக்காக செய்ய பயிற்றுவிக்கும் ஒரு அமைப்பாகும்.
பல வருடங்களாக UCMASஇல் பயிலும் Nilaksan, பல தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறான்.
10 வயதான Nilaksanக்கு இன்று கணிதம் எளிதான ஒன்றாகி விட்டது என்பதை கோலாலம்பூரில் நடைபெற்ற UCMAS சர்வதேச கணித வினாடி வினா போட்டியில் 8 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு பதிலளித்து நிரூபித்திருக்கிறான்.
ஏற்கனவே பல போட்டிகளில் வென்றிருந்தாலும் இது அவன் பங்கு பெறும் முதல் சர்வதேசப் போட்டியாகும்.
ஒன்று முதல் மூன்று இலக்க எண்களில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
எனக்கு கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது என்று கூறும் அவன் விசில் சத்தம் கேட்டதும் படபடவென்று கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான பதில் தெரியாததால் அதை மட்டும் விட்டு விட்டு மற்றக் கேள்விகளுக்கு பதிலளித்தேன் என்கிறான்.
200 கேள்விகளுக்கு 8 நிமிடங்களில் பதிலளித்து போட்டியில் இரண்டாவது பரிசைத் தட்டி வந்திருக்கிறான் Nilaksan.