தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.
ஆன்மிக ரீதியில் நம் உடல் ஆரோக்கியத்தை யோசித்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை புகுத்தினர்.
மக்களிடம் இது உடல் ஆரோக்கியம் என சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால் ஆன்மிகரீதியில் புகுத்தினர். இதை தொடர்ந்து செய்து வந்தால், நம் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றத்தைக் காணலாம்.
தோப்புக்கரணம் போடுவது எப்படி?
வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொண்டு, இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில் தோப்புக்கரணம் போட வேண்டும்
தோப்புக்கரணம் போடுவதால் உடலில் ஏற்படும் மாற்றம்?
தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல், ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.
தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு ரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.
தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.