பிரபல தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி வரும் ‘மௌனராகம்’ என்கிற சீரியலில் முக்கியமான ரோலில் தமிழ்செல்வி என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நந்தினி.
இவர் சீரியலைத் தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல், ஜில்லா, மற்றும் அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அண்மையில் இந்த படங்களில் விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை நந்தினி பேசுகையில்….
நடிகர் விஜய் மிகவும் அமைதியாக இருப்பதால், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை நான் சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை என்று தெரிந்தும் சகஜமாக என்னிடம் பேசி என்னுடைய காட்சிகளில் நான் நடிக்க உதவினார்.
மேலும் நன்றாக நடித்தால் உடனே வந்து பாராட்டுவார் என்று கூறினார்.
அஜித் குறித்து பேசுகையில், அஜித் மிகவும் மரியாதையான மனிதர்.
படப்பிடிப்புக்கு வந்தவுடன் முதலில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வணக்கம் வைத்து விட்டுதான் இயக்குனரையே சந்திக்க செல்வார்.
மிகவும் சிம்பிள் ஆன மனிதர் என கூறியுள்ளார்.