Loading...
வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு இடையூறு விளைவித்ததாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...
வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தூண்டியமை, வீதிகளில் தமது கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...