கனடா பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு நிபந்தனையுடன் கூடிய 2 வருட சிறை தண்டனை விதித்துத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, , மெடிஷின் ஹட் நகர மேயர் மற்றும் பல அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியிருந்த வில்லியம் பென்ஹாம் (வயது 52) என்பவருக்கே இந்தத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்ட இவர் மீது பொதுசொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் மட்டுமே பேசியுள்ளாரெனவும் அவற்றை செயற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் மெடிஷின் ஹட் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.