நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அனைத்து வாக்குசாவடியிலும் சுமூகமான முறையில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன. இதுவரையான நிலவரப்படி 50 சதவீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதுவரை எதுவித பாரிய முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.
தேர்தல் வாக்கு பதிவுகள் நான்கு மணிக்கு நிறைவடையும் போது 60 அல்லது 75 சதவீதமான வாக்குகள் பதியப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
56 வாக்கு நிலையங்களில் இருந்து இறுதிமுடிகளை இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்” என கூறினார்.