Loading...
அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன், பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Loading...
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இதனைக் கேட்டுக்கொள்வதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Loading...