இந்திய மற்றும் தென்னாபிரிக் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாகபிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகின்றது. இந்நியலையில் 4ஆவது போட்டி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பாக ஷிஹார் தவான் 109 ஓட்டங்கள், விராட் ஹோலி 75 ஓட்டங்களையும், டோனி 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஹாகிஷோ ரபாடா மற்றும் லுங்கி நிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோர்ன் மோர்கல் மற்றும் கிரிஷ் மொரிஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிக்க அணி மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 28 ஓவர்களில் 202 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப்பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பில் ஹெயின்றிச் க்லாஷன் 43 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 39 ஓட்டங்களையும் ஹாஸிம் அமலா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ஹூலிப் யாதவ் 2 விக்கெட்டைக் கைப்பற்றினார்.