பாராளுமன்றை கலைக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான
நாமல் ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளதாக நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடள் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டை பிளவடையச் செய்தல், நாட்டுக்குள் சொத்துக்களை விற்பனை செய்தல், மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தல் போன்றனவற்றுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே மக்கள் வாக்களித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் ஆணைக்கு அமைவாக அரசாங்கம் பாராளுமன்றத்த கலைக்க வேண்டுமென தெரிவித்த நாமல் ராஜபக்ஸ
ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றை கலைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்த்தக்கது.