Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதால் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லையென மஹிந்த குறிப்பிட்டதாக ராஜித மேலும் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததன் பின்னணியில் இன்று ராஜித இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...