அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், அவர்களைத் தவறான வழியில் வழிநடத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற மக்களின் தீர்ப்பை நடைபெற்று முடிந்த தேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும், தாங்கள் தொடர்ந்தும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் கூறியதாக ராஜித சேனாரத்ன கூறியிருந்த விடயம் தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.