உலக கிரிக்கெட்டானது சுழல்பந்து வீச்சாளர்களான யுவேந்திர ஷாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை இன்னும் கண்டறியவில்லை என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது, “துடுப்பாட்டம் என்று வரும்போது நாம் எடுத்த ஓட்டங்களைப் பற்றி மட்டுமே நாம் பேசுகின்றோம்.
ஆனால் மத்திய ஓவர்களில் பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர்களான யுவேந்திர ஷாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இதயத்தை உருக்கும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரும் இணைந்து நன்றாக பந்துவீசுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்.
உலக கிரிக்கெட்டானது இவர்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை இன்னும் கண்டறியவில்லை என்றே கருதுகின்றேன்.
இது சிறப்பான ஒரு விடயமாகவுள்ளது.
குறித்த வீரர்களின் சுழற்பந்துகளுக்கு எதிராக எப்படி ஓட்டங்களைக் குவிப்பது என்று எதிரணியினர் கண்டறிய முன் மேலும் பல போட்டிகளில் வெற்றிபெற முயற்சிக்கவேண்டும்.
அந்தவகையில் எதிர்காலத் தொடர்களில் இந்த இரு வீரர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. என்று கூறினார்.