மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் உள்பட பலர் நடிக்கும் திரைப்படமான ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படம் தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக ஏற்பட்டுள்ள மீத்தேன் குறித்த கதை என்று கூறப்படுகிறது.
சிம்பு எஞ்சினியராகவும், அரவிந்தசாமி அரசியல்வாதியாகவும் நடிப்பதாகவும், விஜய்சேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிம்புவின் சகோதரர்களாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு அரசியல்வாதி தனது செல்வாக்கை பயன்படுத்தி மீத்தேன் எடுக்க முயற்சி செய்வதும், அதனை சிம்பு உள்பட நான்கு சகோதரர்கள் தடுப்பதும் தான் கதை என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையா? என்பது படம் வெளிவந்த பின்னர் தான் தெரியவரும்