பாரிசில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காற்றின் மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதாக Ile-de-France அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த திங்கட் கிழமை காற்றின் தரத்தை கண்காணிக்கும் Airparif அதிகாரிகள், காற்றின் தரத்தை ஆராய்ந்தனர்.
அப்போது அவர்கள் மோசமான வானிலை காரணமாகவும் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாகவும் காற்றின் தரம் மிகவும் கெட்டுப் போய்விட்டதாகவும், காற்றில் உள்ள நுண் துகள்களின் செறிவு 45-லிருந்து 55 μg / m3 இடையில் இருக்கிறது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் விளைவை சந்தேகிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
அதாவது தலைநகரில் வாகனங்களில் 130 மற்றும் 110 கி.மீற்றர் வேகத்தில் செல்பவர்கள், 110 மற்றும் 90 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் படியும், அதுவே 110 மற்றும் 90 கி.மீற்றர் வேகத்தில் செல்பவர்கள் 90 மற்றும் 70 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 மற்றும் 5 டன் எடைகளை ஏற்றி வரும் வாகனங்களும், முடிந்தளவிற்கு தலைநகரின் உள்ளே வருவதை தவிர்க்கும் படியும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஆண்டிற்கு பிரான்சில் 48,000 மக்கள் காற்று மாசுபாட்டின் காரணமாக இறப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.