Loading...
வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின்விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.
குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
இதன்படி இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20) முதல் அந்த பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விலகியிருக்க விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணங்கியுள்ளனர்.
மேலும் அதனை மீறும் நபர்களுக்கு எதிரகா சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...