கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திடீரென திறந்துவிட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது.
காவிரியில் இருந்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது காவிரி நதியில் தமிழகத்திற்கு வினாடிக்கு, 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபினி அணையில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல் அணையில், தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா திடீரென தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும், 22ம் தேதி காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.