கோச்சடையான் படத்திற்காக தனியார் நிறுவனத்திடம் வாங்கிய கடன் எப்போது அடைக்கப்படும் என பிற்பகலுக்குள் பதிலளிக்குமாறு லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த், பெங்களூரை சேர்ந்த ஆட் பீரோ என்ற தனியார் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதில் ஒன்றரை கோடி ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த லதா ரஜினிகாந்த், இன்னும் எட்டரை கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், கடனைத் திருப்பித்தர உத்தரவிடுமாறு ஆட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்குச் சென்றது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், எட்டரை கோடி ரூபாய் கடன் பாக்கியை ஏன் திருப்பித் தரவில்லை, எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து பிற்பகலுக்குள் லதா ரஜினிகாந்த் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது