இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 109 பேரும் இன்று தாயகம் திரும்புகின்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நல்லெண்ண அடிப்படையில் 109 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பாக பருத்தித்துறை மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றங்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கியது.
இதனடிப்படையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 109 பேரும் இன்று பிற்பகலில் சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
மாலையில் காரைக்கால் திரும்பும் மீனவர்கள் 109 பேரும், விசாரணைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.