நாட்டின் பல மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியால் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியால் குறிப்பாக குருணாகல் புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஏதேனும் வரட்சிப் பாதிப்புக்கள் இருக்குமாயின் 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் வரட்சி நிலை காரணமாக நீர்மின் உற்பத்தியிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளொன்றுக்கான மின் நுகர்வானது மணித்தியாலயத்திற்கு 43 ஜிகாவோட்ஸாக அதிகரித்துச் சென்றுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.