Loading...
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ளது.
அத்தோடு, பிணை முறி விசாரணை அறிக்கையின் தமிழ்ப்பிரதி இல்லை.
Loading...
இதனை சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மும்மொழிகளிலும் குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்தால் மாத்திரமே விவாதம் வெற்றியளிக்குமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்ட சபாநாயகர், விவாதமின்றி சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைக்கப்பதாக அறிவித்துள்ளார்.
Loading...