நாட்டில் தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையநாள் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்தால் தான் தமிழ் மக்களுக்கு விடுதலை கிட்டும் என்ற கருத்தை ராணுவத்தினரின் பிரசன்னம் உள்ள காலத்திலே முன்வைத்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் தமிழர்களின் விடையங்களில் எவ்வாறு பேரினவாத கட்சிகள் சர்வதேச அரங்கில் இருந்து தப்புவதற்காக ஒன்று படுவது போல் தமிழ் கட்சிகளும் இனத்தை காப்பதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.