பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய இராணுவ வீரரான பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பிரியங்க பெர்னான்டோ இன்றைய தினம் இலங்கை வரவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 70வது சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் யாவரும் அறிந்ததே
இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிரியங்கர பெர்னான்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரகத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு மீண்டும் அழைக்கப்படுவதாக சுமித் அதபத்து மேலும் தெரிவித்துள்ளார்.