தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய நாள் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை அரசியலில் உள்ளுராட்சிமன்ற முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவது பொருத்தமானது அல்ல எனவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.