நடிகர் கமல், தனது அரசியல் பிரவேசத்தை இன்று முதல் துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில், தனது கட்சியையும், கட்சி பெயரையும், கட்சி கொள்கைகளையும் வெளியிட்டுள்ளார்.
தனது கட்சிக்கு மக்கள் நீதி மைய்யம் என பெயரிட்டுள்ளார். கட்சி சின்னமாக சிவப்பு, வெள்ளை கைகள் ஒன்றிணைந்து நடுவில் கருப்பு நிறம் சூழ்ந்த நட்சத்திரம் உள்ளதாக கொடியை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரிற்கும், கட்சியில் சின்னத்திற்கும் விளக்கத்தை அளித்துள்ளார். கமல் கூறியது பின்வருமாறு…
என கட்சி சின்னத்தில் புதிய தென் இந்திய வரைப்படம் தெரியும், தென் இந்தியாவின் 6 மாநிலங்கள் தெரியும், ஒன்றுபட்ட திராவிட தென் இந்திய மாநிலங்களை இந்த கைகள் குறிக்கும்.
அதற்கு இடையில் இருக்கும் நட்சத்திரம் உங்களை குறிக்கும். அதாவது மக்களை குறிக்கும். மய்யம் என்ற பெயர் எதற்கு என கேட்கிறீர்கள். மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி அதான் மய்யம்.
நீங்கள் லெப்ஃட் அல்லது ரைட்டா என்று கேட்கிறார்கள். அதர்கு சேர்த்துதான் மய்யம் என்று பெயர் வைத்துள்ளேன். நாம் தராசில் இருக்கும் நடு முள். நான் இந்த கூட்டத்தில் அடுத்த தலைவனை தேடி கொண்டிருக்கிறேன்.
எங்கள் கட்சி கட்டமைப்பை பார்த்தால் தெரியும் இது முடியும் கட்சி அல்ல குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறை வரை தொடரும் கட்சியாகதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.