முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் உள்ள கோத்தபாய முகாமுக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் உள்ள மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமுக்காக காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நில அளவீட்டு பணி இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் குறித்த பகுதியில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்பாக தமது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு நில அளவையாளர்களை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் வேறு பாதை ஊடாக நில அளவையாளர்கள் இராணுவ முகாமுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் வெளியேறி நில அளவீட்டை நிறுத்த வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் வருகை தந்து இவ்விடயம் தொடர்பில் உத்தரவாதம் அளிக்கவேண்டும் எனவும் கூறி வட்டுவாகல் பாலத்தை மறித்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பரந்தன் முல்லைத்தீவு வீதி போக்குவரத்து வட்டுவாகல் பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை நோயாளர் காவு வண்டிகளை மட்டும் வீதிஊடாக செல்ல ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதித்துள்ளனர்.