Loading...
வரலாற்று சிறப்புமிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக யாழ்.மறைமாவட்ட குரு முதல்வரான அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கச்சதீவு ஆலய பெருவிழாவில் நாட்டின் வடக்கு மற்றும் தென்பகுதிகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் பக்;தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
அத்துடன் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்கவினால் இம்முறை முதல் முறையாக சிங்கள மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...