டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகளின் ஊழல் மதிப்பீட்டு சுட்டெண்ணில் முன்னேற்றம் காண இலங்கை தொடர்ந்தும் தவறியுள்ளது.
180 நாடுகளை கொண்ட குறித்த ஊழல் பட்டியலில் 95ஆவது இடத்திலிருந்த இலங்கை தற்போது 91ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
கழிவு சேகரிப்பு முதல் குழந்தைகளை பாடசாலைகளில் சேர்ப்பது வரை, அத்தியவசிய பொது சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் பணிப்பாளர் அசோக ஒபேசேகர தெரிவித்தார்.
ஊழல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக இந்த சுட்டெண்ணில் பூஜ்யம் முதல் 100 வரையான புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பூஜ்யம் என்பது ஊழல் மிகுந்த நாடாகவும் 100 ஊழற்ற நாடாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் இலங்கை 38 புள்ளிகளுடன் 95ஆவது இடத்திலுள்ளது.