வடக்கு மாகாணத்தில் பல்வேறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையநாள் வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்தி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மருத்துவர்களை மருத்துவ பீடங்கள் உருவாக்கி வருகின்ற போதும் இவ்வாறான மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்குப் போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அதிகமான மருத்துவ மாணவர்கள் மேலதிகப் படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளை நோக்கிச் செல்வதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில மருத்துவர்கள் தன்நலம் பாராது வெளிநாடுகளுக்கும் செல்லாமலும் தமது பிரதேசங்களில் சேவை ஆற்றுவதாக குறிப்பிட்ட விக்னேஸ்வரன் அவர்களை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.