நாட்டில் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றையநாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே கரு ஜெயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள், தங்களுக்கு இடையிலான உடன்படிக்கையை முன்கொண்டு செல்ல இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கரு ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.
இதனால் குறித்த விடயத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என குறிப்பிட்ட கரு ஜெயசூரிய சட்டத்துறை நிபுணர்கள் தமக்கு விளக்கமளித்திருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் சட்டரீதியான விடயங்களை பூரணப்படுத்த மேலதிகமாக ஏதேனும் செய்ய வேண்டியுள்ளதா? என்பது குறித்தும் ஆராய்வதாகவும் கரு ஜெயசூரிய மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.