செஞ்சுரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய துடுப்பட்டத்தின் போது கடைசி ஓவரில் முதல் பந்தை மனிஷ்பாண்டே அடித்துவிட்டு ஓட்டம் எடுக்க ஓடினார்.
மறுமுனையில் இருந்து டோனி 2 ஆவது ஓட்டத்தை எடுக்க விரும்பினார். ஆனால் மனீஷ்பாண்டே பந்தை கவனித்தபடி மெல்லமாக ஓடினார்.
இதனால் கோபம் அடைந்த டோனி மனிஷ்பாண்டேவை திட்டினார். இந்தியில் பேசிய டோனி, முகத்தில் கோபத்தை காட்டியபடி மனீஷ் பாண்டேயை பார்த்து ஏதோ கூறினார்.
இதில் கடைசி வார்த்தைகள் மட்டும் தெளிவாக கேட்டது. அதில், அங்கே என்ன பார்த்துட்டே இருக்க? இங்க பாரு. கவனமாக இரு என்று கூறி உள்ளார்.
களத்தில் எதற்கும் கோபம் அடையாமல் சாந்தமாக இருப்பவர் என்ற பெயரை பெற்ற டோனி கடும் சீற்றத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.