Loading...
உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் 3ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களது பெயர்களை பரிந்துரைக்குமாறு, அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு, பிரதி தேர்தல் ஆணையாளர்களால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Loading...
அத்துடன் குறித்த விபரங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Loading...