Loading...
தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு – கல்லடி பாடுமீன் பூங்காவில் ஆரம்பமான நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், இலங்கை தேசிய பாரிசவாத சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை சென்ற இந்த நடை பவனியில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...