மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால், தனது மகன் டேக்நரைனும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால், அதிக டெஸ்ட் போட்டிகளில் (164 போட்டிகள்) விளையாடிய வீரர் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சந்தர்பால் தனது மகன் டேக்நரைனுடன் விளையாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, கயானா அணிக்காக இருவரும் விளையாடியுள்ளனர்.
விண்ட்வார்டு ஐஸ்லாண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 287 ஓட்டங்கள் இலக்கை விரட்டிய கயானா அணி, 231 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது.
இதில், சந்தர்பால் 34 ஓட்டங்களும், டேக்நரைன் 12 ஓட்டங்களும் எடுத்தனர். இந்நிலையில் இது குறித்து சந்தர்பால் கூறுகையில், ‘இளம் வீரரான டேக்நரைன், முடிந்தவரை சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே அணிக்காக ஆடுவதால் எங்களுக்குள் எந்த தர்மசங்கடமும் இல்லை. கலகலப்பாக பேசி ஜாலியாகவே இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் டேக்நரைன் கூறுகையில், ‘நான் எனக்குரிய பாணியில் விளையாட முயற்சிக்கிறேன். பயிற்சியின் போது தந்தையிடம் சில ஆலோசனைகளை பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.