வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – தம்பானம் வெளி கிராமத்தில் எஸ்.வியாழேந்திரனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நுழைவாயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றைய நாள் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்புடன் இணையும் ஏனைய கட்சிகளும் குறித்த விடயத்தில் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால், கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவும் வியாழந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவை சீர்செய்ய வேண்டும் எனவும் வியாழேந்திரன் மேலும் தெரிவித்துள்ளமையுயம் குறிப்பிடத்தக்கது.