Loading...
சோமாலியா நாட்டின் மொகடிசு நகரில் நேற்றுமுன்தினம் இரட்டைக் குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்த நிலையில் இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்தது.
கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் உள்ள அரச அலுவலகங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 18பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
Loading...
இந்த எண்ணிக்கை தற்போது 45ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த சிலரின் நிலமை கவலைக்கிடம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டது
Loading...