எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். மற்றவர்களுக்காக பரிந்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தவறு செய்பவர்களை திருத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதிற்கு இனிமையான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை