Loading...
வடக்கு மாகாண மகளிர்விவகார அமைச்சரான அனந்தி சசிதரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளர் சிவகரன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இலங்கை தமிழரசு கட்சி நீக்கவுள்ளது.
இதற்கான முடிவை கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டிருப்பதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த விடையம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இருவரும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தள்ளார்.
Loading...