மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் காணப்பட்ட நிலை தற்போது நாட்டில் இல்லை என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய நாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொது நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகின்றவர்கள் முடிந்தால் அதனை செய்து காட்டவேண்டும் எனவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சவால் விடுத்துள்ளார்.
தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பி விடுவதாக சிலர் கொக்கரித்து வருவதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம்
பொதுஜன பெரமுன கட்சியினால் முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து அரசாங்கத்தை வீழ்த்திக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கும் நிலையினை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அகிலவிராஜ் காரியவசம் மஹிந்த காலத்தில் இப்படியான நிலை காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் ஊடகங்கள் மீது தாக்குதல்களும், மீறுகின்ற பட்சத்தில் வெள்ளைவேன் கடத்தல்களும் இடம்பெற்று வந்ததாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம் அவ்வாறானவர்களே தற்போது ஆட்சிக்கவிழ்ப்பு குறித்து பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சரவை மாற்றமானது நகைச்சுவையான விடயம் என மஹிந்த ராஜபக்ச கூறுவதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம் ஆனால் அவருடைய ஆட்சி காலத்திலேயே அவ்வாறான முறைகேடுகள் நடைபெற்று வந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.