முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ‘2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்ததாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை எனவும் மைதிரிபால சிறிசேன குறிப்பிடுவதாகவும்
அதுமாத்திரமின்றி, பதவிக்காலம் குறித்தும் வினவிவருவதாக தெரிவித்த பிமல் ரத்நாயக்
இவற்றிலிருந்து அவரது ஜனாதிபதி பதவிக்கான ஆசை வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது மக்களின் ஆதரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் உள்ளமையானது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் வெளியாகியுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிடமுள்ள இந்த ஆதரவு ஜனாதிபதி மைத்திரிக்கு தேவையாகவுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால், மஹிந்த தவிர்ந்த அவரது குடும்பத்தின் பிரபலத்தை தன்னுடன் இணைத்து ராஜபக்சவின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முயச்சித்து வருவதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.