தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால் யாரையும் முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது’ என தென்னிந்திய பிரபல நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பிரபல சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது பெற்ற பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே சத்தியராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விழாவில் பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்ததற்காக, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது சத்தியராஜூக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது ‘நிஜவாழ்வில் யாருக்கு கட்டப்பாவாக இருக்க ஆசைப்படுகின்றீர்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் சத்தியராஜ், ‘தமிழ் இனத்தில் அந்த பழக்கம் கிடையாது எனவும் நேருக்கு நேர் நின்று போராடும் குணம் படைத்தவர்கள் எனவும் தெரிவித்தள்ளார்.