மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை எதிர்வரும் 24 மணித்தியாலத்தினுள் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர், சிங்கபூர் அரசாங்கத்திடம் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை முன்வைக்க வேண்டும் எனவும் டளஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஊடாக 24 மணி நேரத்துக்குள் அவரை நாட்டுக்கு அழைத்துவர முடியும் என்று டளஸ் அழகப்பெரும நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியரை 24 மணி நேரத்துக்குள் நாட்டுக்கு அழைத்து வர இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருத்திருந்ததாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் முறிமோசடியில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரனை ஏன் அழைத்துவர முடியாது எனவும் டளஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.