நாட்டில் தற்பேதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அனைத்து மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையநாள் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கமல் குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு சவாலாக அமைந்த இடங்கள் நாட்டுக்கு தொடர்ந்து சவாலான இடமாக அமையாது என்ற நிலை தோன்றும்வரை அவை தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வட்டுவாகல் மற்றும் பலாலி என்பன அவ்வாறான இடங்கள் என தெரிவித்த கமல் குணரத்ன
யுத்தத்தின் போது வட்டுவாகல் போன்ற பகுதிகள் பல உயிர்கள் காவுகொடுக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தும் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறான இடங்களில் மீண்டும் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட கமல் குணரத்ன
கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சிவாஜிலிங்கம் போன்றவர்களை ஜனாதிபதி தனிப்பட்டமுறையில் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஓய்வூதியத்திற்காக பல நாட்கள் போராட்டம் நடத்திய உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களை ஜனாதிபதி நேரில் சென்று சந்திக்காதது இராணுவ வீரர் என்றவகையில் வேதனைக்குரியதெனவும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.