ஐக்கிய தேசிய கட்சியில் தெளிவான மாற்றங்கள் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிக விரைவாக கட்சியில் தெளிவானதொரு மாற்றம் ஏற்படவில்லை என்றால் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கிடைத்துள்ள ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்றையநாள் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்நோக்கி செல்லும் எனவும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.