திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையும் வலம் வந்து அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) காலை இறை வழிப்பாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு, தேவஸ்தானம் சார்பில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பிரபலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தரிசன பீடத்தில் ஏழுமலையானை தரிசித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து நேற்று மதியம் சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்ற மஹிந்த அங்கிருந்து மகிழூர்தி மூலம் திருப்பதி மலைக்கு சென்றுள்ளார்.
திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று பிரபலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தரிசன பீடத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.